< Back
மாநில செய்திகள்
புனித பனிமய மாதா ஆலய தேர் பவனி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

புனித பனிமய மாதா ஆலய தேர் பவனி

தினத்தந்தி
|
4 Aug 2023 8:25 PM GMT

புனித பனிமய மாதா ஆலய தேர் பவனி நடந்தது.

பெரம்பலூர்:

பெரம்பலூரில் உள்ள பிரசித்தி பெற்ற புனித பனிமய மாதா ஆலய ஆண்டு பெருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து விழா நாட்களில் தினமும் மாலையிலும் பல்வேறு திருத்தலங்களின் பங்கு குருக்களால் சிறப்பு பிரார்த்தனைகளும், திருப்பலிகளும் நடைபெற்றது. பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று இரவு நடந்தது. முன்னதாக மாலை 6 மணியளவில் முன்னாள் குடந்தை மற்றும் கோட்டாறு மறை மாவட்ட மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் பெருவிழா திருப்பலியை பெரம்பலூர் மறை வட்ட முதன்மை குருவும், பங்கு தந்தையுமான ராஜமாணிக்கம் முன்னிலையில் நடத்தினார். இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் பனிமய மாதாவின் சொரூபம் வைக்கப்பட்டது. இதையடுத்து இரவு 8.30 மணியளவில் ஆலய வளாகத்தில் இருந்து தேர் பவனி தொடங்கியது. தேர் செக்கடி தெரு, பெரிய தெற்கு தெரு, மேற்கு வானொலி திடல், பழைய பஸ் நிலையம், காமராஜர் வளைவு, சங்குபேட்டை வழியாக சென்று மீண்டும் ஆலயத்துக்கு வந்தடைந்தது. இதில் திரளான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இன்று (சனிக்கிழமை) காலை கொடியிறக்கத்துடன் பெருவிழா நிறைவு பெறுகிறது.

மேலும் செய்திகள்