< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பி.எப்.ஐ. அமைப்பு தடை எதிரொலி - சென்னை விமான நிலையத்தில் வாகனங்கள் தீவிர சோதனை
|5 Oct 2022 5:31 AM IST
சென்னை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை,
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா(பி.எப்.ஐ.) அமைப்பிற்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு முக்கிய நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சென்னை விமான நிலையத்தில் வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை மத்திய தொழிற்பாதுகாப்பு படை போலீசார் சோதனை செய்கின்றனர். மேலும், மோப்ப நாய்களைக் கொண்டு சோதனை செய்த பின்னரே வாகனங்களை விமான நிலையத்திற்குள் அனுமதித்து வருகின்றனர்.