< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கேரளாவில் பி.எப்.ஐ. மற்றும் அதோடு தொடர்புடைய அனைத்து அலுவலகங்களுக்கும் சீல் வைப்பு
|1 Oct 2022 4:38 PM IST
பி.எப்.ஐ. அமைப்புடன் தொடர்புடை கேம்பஸ் ப்ரண்ட் அமைப்பின் அலுவலகங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.
திருவனந்தபுரம்,
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா(பி.எப்.ஐ.) அமைப்பிற்கு தடை விதித்து அதன் அனைத்து அலுவலகங்களையும் மூடுமாறு மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து நாடு முழுவதும் பி.எப்.ஐ. அலுவலகங்கள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கேரள மாநிலத்தில் கேரளாவில் உள்ள பி.எப்.ஐ. அலுவலகங்களை மூடும் பணியில் கேரள போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பந்தளம், ஆத்தூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள பி.எப்.ஐ. அலுவலகங்களில் சோதனை நடத்தி சீல் வைக்கப்பட்டது. அதே சமயம் பி.எப்.ஐ. அமைப்புடன் தொடர்புடை கேம்பஸ் ப்ரண்ட் அமைப்பின் அலுவலகங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.