திருவாரூர்
திருவாரூரில், வருங்கால வைப்பு நிதி குறைதீர்ப்பு முகாம்
|திருவாரூரில் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைதீர்ப்பு முகாம் வருகிற 27-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.
திருவாரூரில் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைதீர்ப்பு முகாம் வருகிற 27-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.
இதுகுறித்து திருச்சி மண்டல இ.பி.எப்.ஓ. முதன்மை ஆணையர் முருகவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருங்கால வைப்பு நிதி
மத்தியஅரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் மாவட்டம் தோறும் குறைதீர்க்கும் மற்றும் விழிப்புணர்வு சிறப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடந்து வருகிறது.
அதன்படி வருகிற 27-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை திருவாரூர் விஜயபுரத்தில் வர்த்தகசபை திருமண மண்டபத்தில் நடக்கிறது. இந்த முகாமில் இ.பி.எப். தொடர்பான சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்கள் அளிக்கப்படும்.
சந்தேகங்களுக்கு விளக்கம்
இ.பி.எப். செட்டில் மெண்ட், வெவ்வேறு பி.எப். கணக்குகளை இணைப்பது, யு.ஏ.என். கணக்கினை பயன்படுத்தும் முறை, ஆதார், வங்கி கணக்கு, உள்ளிட்ட தங்களுடைய சுயவிவரங்களை இணைத்தல் உள்ளிட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்படும். மேலும் ஓய்வூதியர்கள் முகாம் நடைபெறும் இடத்திலேயே மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பெயா் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை எழுத்துபூர்வமாக முகாமில் தெரிவிக்கலாம். எனவே முகவர்கள், சந்தாதாரர்கள், தொழில் நிறுவனங்களின் முதலாளிகள், அவர்களின் முகவர்கள் ஆகியோர் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.