< Back
மாநில செய்திகள்
மேலூர் அருகே வங்கி மேலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு? -போலீஸ் விசாரணை
மதுரை
மாநில செய்திகள்

மேலூர் அருகே வங்கி மேலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு? -போலீஸ் விசாரணை

தினத்தந்தி
|
14 Oct 2022 2:29 AM IST

மேலூர் அருகே வங்கி மேலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீசப்பட்டது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலூர்,

மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டியை சேர்ந்தவர் வடிவேலன் (வயது 40).தனியார் வங்கி மேலாளர்.இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த போஸ் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்துவருகிறது. வடிவேலன் தனது குழந்தைகளின் படிப்பிற்காக மதுரை சம்பகுளத்தில் வசித்து வருகிறார். இதனால் அரிட்டாபட்டியில் உள்ள அவரது வீட்டில் அக்காள் அழகு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் அரிட்டாபட்டியில் வடிவேலனின் வீட்டில் முன்பு இருந்த கட்டில் தீப்பிடித்து எரிந்துள்ளது. அடையாளம் தெரியாத 6 பேர் மதுபாட்டிலில் பெட்ரோலை ஊற்றி தீப்பற்றவைத்து போர்டிகோவில் போட்டுவிட்டு சென்று விட்டதாகவும், வீட்டின் உள்ளே இருந்தவர்கள் வந்து பார்த்தபோது கட்டில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததாகவும் வடிவேலன் மேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவரது வீட்டில் வீசப்பட்டது பெட்ரோல் குண்டா? யார் வீசினார்கள் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்