< Back
மாநில செய்திகள்
கோவில் கருவறைக்குள் பெட்ரோல் குண்டு வீச்சு: தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதல பாதாளத்திற்குப் போய்விட்டது - அண்ணாமலை

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

கோவில் கருவறைக்குள் பெட்ரோல் குண்டு வீச்சு: தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதல பாதாளத்திற்குப் போய்விட்டது - அண்ணாமலை

தினத்தந்தி
|
10 Nov 2023 3:32 PM IST

கோவில் கருவறைக்குள்ளே, சுவாமி சிலையின் மீதே பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

"சென்னையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, கவர்னர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, இதன் தொடர்ச்சியாக இன்று கோவிலுக்குள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

சென்னை பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெரு, வீரபத்ர சுவாமி கோவில் கருவறைக்குள்ளே, சுவாமி சிலையின் மீதே பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதல பாதாளத்திற்குப் போய்விட்டது.

போலி மதச்சார்பின்மையும், அரைகுறை நாத்திகமும் பேசித் திரியும் பிரிவினைவாத அமைப்புக்களை கட்டுப்படுத்த, திமுக தவறியதன் விளைவு, இன்று கோவிலுக்குள்ளேயே பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்குக் கொண்டு வந்திருக்கிறது.

தீவிரவாதத் தாக்குதலை சிலிண்டர் வெடிப்பு என்று மடைமாற்ற முயற்சித்த கையாலாகா திமுக அரசே இதற்கு முழு பொறுப்பு."

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


மேலும் செய்திகள்