< Back
மாநில செய்திகள்
வீட்டுவசதி வாரிய திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக மனுக்கள் அளிக்கலாம்
மாநில செய்திகள்

வீட்டுவசதி வாரிய திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக மனுக்கள் அளிக்கலாம்

தினத்தந்தி
|
3 Jun 2023 3:25 AM IST

வீட்டுவசதி வாரிய திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக மனுக்கள் அளிக்கலாம் அரசு அறிவிப்பு.

சென்னை,

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் வீட்டுவசதி திட்டங்களை செயல்படுத்திட நிலங்கள் கையப்படுத்தப்பட்டது தொடர்பாக பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதன் தொடர்ச்சியாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து கோரிக்கை மனுக்களை அளிக்க கே.கே.நகர் கோட்ட அலுவலகத்தில் கோரிக்கை பெட்டி வைக்கப்பட்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட உள்ளன.

இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரையில் கோரிக்கை மனுக்களை பெட்டியில் போடலாம்.

மக்களின் குறைதீர்க்க முதல்-அமைச்சரின் முன்னெடுப்பு திட்டத்தின் மூலம் பொதுமக்கள் மனு செய்து பயன்பெறுமாறு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கேட்டுக்கொண்டுள்

மேலும் செய்திகள்