< Back
மாநில செய்திகள்
மாவட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 1,463 மனுக்கள்
சிவகங்கை
மாநில செய்திகள்

மாவட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 1,463 மனுக்கள்

தினத்தந்தி
|
29 May 2023 12:15 AM IST

மாவட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 1,463 மனுக்கள் பெறப்பட்டன

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள, அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கடந்த 23-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை வருவாய் தீர்வாய (ஜமாபந்தி) நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் சிவகங்கை வட்டத்தில் 199 மனுக்களும், திருப்பத்தூர் வட்டத்தில் 129 மனுக்களும், காளையார்கோவில் வட்டத்தில் 121 மனுக்களும், காரைக்குடி வட்டத்தில் 153 மனுக்களும், தேவகோட்டை வட்டத்தில் 92 மனுக்களும், திருப்புவனம் வட்டத்தில் 246 மனுக்களும், மானாமதுரை வட்டத்தில் 175 மனுக்களும், இளையான்குடி வட்டத்தில் 131 மனுக்களும் சிங்கம்புணரி வட்டத்தில் 217 மனுக்களும் என மொத்தம் 1,463 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது.

இந்த மனுக்களின் மீது அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்தி, கள ஆய்வுகள் மேற்கொண்டு, ஒருவாரகாலத்திற்குள் அனைத்து மனுதாரர்களின் தகுதியுடைய மனுக்கள் மீது தீர்வு காண்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்