< Back
மாநில செய்திகள்
பெரியசூரியூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் குறைதீர் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு
திருச்சி
மாநில செய்திகள்

பெரியசூரியூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் குறைதீர் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு

தினத்தந்தி
|
20 Dec 2022 12:45 AM IST

பெரியசூரியூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று குறைதீர் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

பெரியசூரியூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று குறைதீர் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

குறைதீர் நாள் கூட்டம்

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில் பல்வேறு அரசுத்துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் நலச்சங்க தலைவர் சக்திவேல் தலைமையில் தூய்மை பணியாளர்கள் அளித்த மனுவில், திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை-கிராம ஊராட்சி- தொகுப்பு ஊதிய தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் அனுமதித்து ஆணை வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை காலமுறை ஊதியம் வழங்கப்படவில்லை. ஆகவே காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்து, நிலுவைத்தொகையுடன் வழங்கிட அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

ஆட்டோ கட்டணம்

நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜாமுகமது தலைமையில் ஆட்டோ டிரவைர்கள் திரண்டு வந்து அளித்த மனுவில், கடந்த 2010-ம் ஆண்டு ஆட்டோ கட்டணமாக 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.25-ம், மேலும் ஒரு கி.மீ.க்கு ரூ.12 எனவும் தமிழக அரசு நிர்ணயித்து இருந்தது. தற்போது அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலை உயர்வால் மேற்படி கட்டணத்தை ஈடு செய்ய முடியவில்லை. ஐகோர்ட்டு ஆட்டோ கட்டணத்தை உயர்த்தி தர அறிவுறுத்தியுள்ளது. இதனால் 2 கி.மீ.க்கு ரூ.60-ம், ஒரு கி.மீ.க்கு ரூ.20 என உயர்த்தி தர உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தனர்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி

திருச்சி திருவெறும்பூர் பெரியசூரியூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் அளித்த மனுவில், பெரிய சூரியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தைத்திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி ஸ்ரீநற்கடல்குடி கருப்பண்ணசுவாமி கோவிலில் ஜல்லிக்கட்டு விழா நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

திருச்சி அண்ணா விளையாட்டு மைதானம் அருகே உள்ள மாணவர் விடுதியல் சமையலராக பணியாற்றி வந்த பரசுராமன் உள்ளிட்ட சிலர் கலெக்டரிடம் அளித்த மனுவில், நாங்கள் பல்வேறு அரசு விடுதியில் சமையலராக 23 மாதங்களாக பணியாற்றி வந்தோம். நாங்கள் உயர்கல்வி பயின்றுள்ளதாக கூறி எங்களை பணியில் இருந்து நீக்கி உள்ளனர்.

ஆனால் 2010 மற்றும் 2015-ம் ஆண்டில் உயர்கல்வி பயின்று உள்ளவர்கள் இந்ததுறையில் பணியாற்றி வருகிறார்கள். தற்போது 2021-ம் ஆண்டு குறிப்பிட்ட சிலரை மட்டும் உயர்கல்வியை காரணம் காட்டி நீக்கி உள்ளார்கள். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே எங்களை தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

மணப்பாறை காந்திநகர் முனியப்பன்குளத்தை சேர்ந்த திலகவதி (76) அளித்த மனுவில், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறை சென்றவர்களுக்கு தமிழறிஞர்கள் என்ற தலைப்பில் அரசு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கி வருகிறது. உதவித்தொகை பெற்று வந்தவர்களில் இறந்தவர்களின் மரபுவழி வாரிசுகளான துணைவியார்களுக்கு உதவித்தொகையை வழங்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

Related Tags :
மேலும் செய்திகள்