திருச்சி
தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்க கோரி கலெக்டரிடம் மனு
|தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்க கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய எம்ப்ளாயீஸ் யூனியன் பொதுச்செயலாளர் மருதைராசு, சி.ஐ.டி.யு. ரெங்கராஜன் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், "தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் திருச்சி மாவட்டத்தில் 250-க்கும் அதிகமான தற்காலிக பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுக்கு உயர்நீதிமன்ற வழக்கில் இடைக்கால தீர்ப்பின்படி சம்பளம் வழங்கப்படாமலும், அவர்களது பெயரில் இ.பி.எப்., இ.எஸ்.ஐ., தொகையை கணக்கீடு செய்து பிடித்தம் செய்து அவரது வங்கி கணக்கில் செலுத்தாமலும் மிகவும் குறைவான சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே இடைக்கால தீர்ப்பில் கூறப்பட்டுள்ள ஊதியத்தையும், பிரதிமாதம் 7-ந் தேதி சம்பளத்தை அவர்களது வங்கி கணக்கில் வழங்குவதை உறுதிப்படுத்தவும், தீபாவளிக்கு சட்டப்படியான போனஸ் வழங்கிடவும், தற்காலிக தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் கிடைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறி இருந்தனர்.