< Back
மாநில செய்திகள்
உதவி ஆசிரியர் தொடர்ந்து பணிபுரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மனு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

உதவி ஆசிரியர் தொடர்ந்து பணிபுரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

தினத்தந்தி
|
20 Jun 2023 12:39 AM IST

உதவி ஆசிரியர் தொடர்ந்து பணிபுரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, விசுவக்குடி கிராம மக்கள் சிலர் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒரு மனு அளிக்கப்பட்டது. அதில், விசுவக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உதவி ஆசிரியராக பணிபுரிந்து வந்த பிரான்சிஸ் பீட்டர் ஏற்கனவே அரும்பாவூா் பள்ளிக்கு மாற்றப்பட்டிருந்தார். அந்த ஆசிரியர் விசுவக்குடி பள்ளியில் பணிபுரிந்தபோது சுற்றுச்சூழல் பசுமையான இந்தியா சார்பில் 2 முறை சிறந்த பள்ளிக்கான விருதினையும் பெற்று தந்தார். மேலும் கல்விச்சீர் திருவிழா, ஆண்டு விழா உள்ளிட்டவைகளை நடத்தினார். தற்போது அந்த ஆசிரியர் மீண்டும் விசுவக்குடி பள்ளியில் அமர்த்தப்பட்டார். அந்த ஆசிரியர் திரும்ப விசுவக்குடி பள்ளிக்கு வருவதை விரும்பாத சிலர் அவரை வேறு பள்ளிக்கு மாற்ற முயற்சிக்கின்றனர். ஆசிரியர் பிரான்சிஸ் பீட்டர் தொடர்ந்து விசுவக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்