மதுரை
நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு
|நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டது.
நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்ககோரி, வக்கீல் முத்துக்குமார் தலைமையில் பா.ஜ.க. வக்கீல்கள் அமிர்தராஜ், கேசவராஜ், நீலமேகம், மேஜர்குமார் உள்ளிட்டோர் போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அதில் நடிகர் சித்தார்த், மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் மீது வீணான, தேவையில்லாத அவதூறு பிரசாரங்களை தனது சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார். அவர் நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக பொய் கூறுகிறார். தனது சுய விளம்பரத்திற்காக பாதுகாப்பு படையினரை பணிய வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறார். எனவே, நாட்டின் பாதுகாப்பு தன்மைக்கும், இந்திய இறையான்மைக்கும் தொடர்ந்து ஆபத்து ஏற்படுத்தும் வகையில் நடிகர் சித்தார்த்தின் விமான பயணத்திற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும், மேலும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.