< Back
மாநில செய்திகள்
நில ஒருங்கிணைப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டுகோள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

நில ஒருங்கிணைப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டுகோள்

தினத்தந்தி
|
14 May 2023 12:55 AM IST

நில ஒருங்கிணைப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் விவசாயம் குறைந்து வருகிறது. மத்திய-மாநில அரசுகள் விவசாயிகளின் மீது அக்கறை காட்டுவதில்லை. விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் நிலங்களை தற்போது விவசாயிகள் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறார்கள். விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைத்தால்தான் விவசாயிகளால் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியும். நெல், பருத்தி, கரும்பு, கடலை உள்ளிட்ட விவசாய விளை பொருட்களுக்கு விலை இல்லை. ஆனால் அரிசி, துணி, சர்க்கரை, கடலை எண்ணெய் போன்றவற்றின் விலையும், ஆண்டுக்கு 2 முறை உரங்களின் விலையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

விவசாய விளை பொருட்களினால் இடைத்தரகர்கள் கொள்ளை லாபம் பார்க்கின்றனர். விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதில்லை. இத்தகைய நிலையில் விளை நிலங்களை சீரழிக்கும் நில ஒருங்கிணைப்பு சட்டம் கொண்டு வந்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவதோடு, விவசாயமே அழிந்து விடும். எந்த ஆட்சி வந்தாலும் விவசாயிகளின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தினால் மேலும் நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எனவே இந்த சட்டத்தை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்த சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் ஒன்று திரண்டு போராடவும் தயங்க மாட்டார்கள். விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் வேளாண் விளை பொருட்களுக்கு விலை நிர்ணயிக்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். அதனை தமிழக அரசு ஆதரிக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்