< Back
மாநில செய்திகள்
சாலையை சீரமைக்கக்கோரி மனு
தேனி
மாநில செய்திகள்

சாலையை சீரமைக்கக்கோரி மனு

தினத்தந்தி
|
8 April 2023 12:30 AM IST

வீரப்ப அய்யனார் கோவிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்கக்கோரி இந்து எழுச்சி முன்னணியினர் தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

இந்து எழுச்சி முன்னணி தேனி நகர தலைவர் செல்வபாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் சிலர் தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமாரிடம் அவர்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில், 'அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோவில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பிரமாண்டமாக நடப்பது வழக்கம். லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். நூற்றுக்கணக்கான மக்கள் காவடி சுமந்தும், பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இந்நிலையில், ஊரில் இருந்து கோவிலுக்கு செல்லும் சாலை சேதம் அடைந்துள்ளது. சாலையின் இருபுறமும் புதர் மண்டிக் கிடக்கிறது. எனவே சாலையை சீரமைத்து, சாலையோரம் உள்ள புதர்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்