விழுப்புரம்
மற்றொரு வாலிபரை தேடும் பணியை தீவிரப்படுத்தக்கோரி மனு
|ஆற்றில் மூழ்கி மாயமான மற்றொரு வாலிபரை தேடும் பணியை தீவிரப்படுத்தக்கோரி மனு
விழுப்புரம்
விழுப்புரத்தை அடுத்த பேரங்கியூரை சேர்ந்த நரசிம்மன் மகன் சதீஷ்(வயது 30), பிரகாசம் மகன் பரத் என்கிற செந்தில் 30). இவர்கள் இருவரும் கடந்த 17-ந் தேதி மாலை தங்கள் நண்பர்களுடன் பிடாகம் தென்பெண்ணையாற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். அவர்களை போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் ரப்பர் படகுகள் மூலம் தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில் எனதிரிமங்கலம் தென்பெண்ணையாற்றின் பகுதியில் நேற்று முன்தினம் மாலை சதீஷின் உடல் கரை ஒதுங்கியது. பரத்தின் உடலை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், அருகில் உள்ள கடலூர் மாவட்ட காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையையும் இப்பணியில் ஈடுபடுத்தி தேடுதல் பணியை தீவிரப்படுத்த வேண்டுமென அம்மனுவில் கூறியிருந்தனர்.