அரியலூர்
காணாமல்போன ஏரியை கண்டுபிடித்து தரக்கோரி மனு
|ஜெயங்கொண்டம் அருகே காணாமல்போன ஏரியை கண்டுபிடித்து தரக்கோரி மனு அளிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட தொட்டிகுளம் கிராமத்தில் மக்களின் பயன்பாட்டில் இருந்த 2 ஏக்கர் பரப்பளவிலான ஏரியை காணவில்லை. எனவே இந்த ஏரியை கண்டுபிடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-
தொட்டிகுளம் கிராமத்தில் மக்களின் பயன்பாட்டில் இருந்த ஏரி கடந்த 15 ஆண்டுகளாக காணவில்லை. மேலும் ஏரிக்கான பாசன வாய்க்காலையும் காணவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏரியை ஆக்கிரமித்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். மேலும் இந்த ஏரியை மீட்டு புனரமைத்தால் பொன்னாற்று பாசன வாய்க்காலின் மூலம் ஏரியில் தண்ணீர் நிரப்பலாம். இதன் மூலம் விவசாயம் செய்யலாம் என்றனர்.