< Back
மாநில செய்திகள்
சேதமடைந்த வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்டித்தரக்கோரி மனு
கரூர்
மாநில செய்திகள்

சேதமடைந்த வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்டித்தரக்கோரி மனு

தினத்தந்தி
|
30 Jun 2022 12:12 AM IST

சேதமடைந்த வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்டித்தரக்கோரி மனு அளிக்கப்பட்டது.


குளித்தலை ஊராட்சி ஒன்றியம் ராஜேந்திரம் ஊராட்சிக்குட்பட்ட வாளாந்தூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது வாளாந்தூர் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு சிலருக்கு தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டன. இந்த வீடுகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது இந்த வீடுகள் மிகவும் சேதம் அடைந்த நிலையில் உள்ளது.

எந்த ஒரு வழியும் இன்றி ஆபத்தான சூழ்நிலையில் இந்த வீடுகளில் அச்சத்துடன் தங்கி வருவதாக தொகுப்பு வீடுகளில் வசிப்போர் தெரிவித்தனர். மேலும் பழைய தொகுப்பு வீடுகளை அப்புறப்படுத்தி அங்கு புதிய தொகுப்பு வீடுகள் கட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்க வந்ததாக தெரிவித்தனர். பின்னர் தங்கள் கோரிக்கை மனுவை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் அவர்கள் அளித்தனர்.

மேலும் செய்திகள்