< Back
மாநில செய்திகள்
அரசு கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் சேர்வதற்கான கலந்தாய்வை நடத்தக்கோரி மனு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

அரசு கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் சேர்வதற்கான கலந்தாய்வை நடத்தக்கோரி மனு

தினத்தந்தி
|
5 July 2023 12:39 AM IST

அரசு கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் சேர்வதற்கான கலந்தாய்வை நடத்தக்கோரி மனு அளிக்கப்பட்டது.

பெரம்பலூரில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நேற்று மாவட்ட கலெக்டர் கற்பகத்திடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:-

அரசு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள புதிய மாணவர்களுக்கான வகுப்புக்கள் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. ஆனால் முதலாம் ஆண்டு மாணவர்களின் வருகை குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தது. வெளிமாவட்டங்களில் இருந்து பெரம்பலூர் மாவட்ட கல்லூரிளுக்கு வரக்கூடிய மாணவர்கள் வரவில்லை. விடுதிக்கான கலந்தாய்வு இன்னும் நடத்தப்படவில்லை என்பதே இதற்கு காரணம் ஆகும். எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கான விடுதிக்கான கலந்தாய்வை விரைந்து நடத்தி மாணவர்களின் விடுதி சேர்க்கை பட்டியலை வெளியிட வேண்டும். மேலும் விடுதியில் கடந்த ஆண்டு தங்கி படித்து வந்துள்ள நிலையில், இடைநின்ற மாணவர்களின் இடங்களுக்கு பதிலாக புதிய மாணவர்களுக்கு விடுதியில் தங்கி படிக்க ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Related Tags :
மேலும் செய்திகள்