< Back
மாநில செய்திகள்
ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு
விருதுநகர்
மாநில செய்திகள்

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு

தினத்தந்தி
|
29 Nov 2022 12:24 AM IST

சிவகாசி அருகே ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் மேலாமத்தூர் கிராம மக்கள் சார்பாக இந்திய கம்யூனிஸ்டு கிளைச் செயலாளர் மணிகண்டன் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் பள்ளி குழந்தைகளுக்கு வசதியாக மேலாமத்தூர் வரை பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளார்.

சிவகாசியை சேர்ந்த சமூக ஆர்வலர் தங்கராஜ் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், சிவகாசி பகுதியில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில் அங்கு படிக்கும் பட்டியலின மாணவ- மாணவியர் பெரும் சிரமப்படும் நிலை உள்ளதால் அப்பகுதியில் பட்டியலின மாணவ- மாணவியர் விடுதி கட்டி தர வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

சிவகாசி தாலுகா மீனம்பட்டி கிராம மக்கள் கொடுத்த மனுவில், மீனம்பட்டியில் இருந்து நாரணாபுரம் வரை செல்லும் பொதுபாதை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால் பெரும் சிரமம் ஏற்படுகிறது. பாதை ஆக்கிரமிப்பை அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்