< Back
மாநில செய்திகள்
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு தடை கோரிய மனு - சுப்ரீம் கோர்ட்டில் ஜனவரியில் விசாரணை
மாநில செய்திகள்

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு தடை கோரிய மனு - சுப்ரீம் கோர்ட்டில் ஜனவரியில் விசாரணை

தினத்தந்தி
|
7 Dec 2023 8:32 PM IST

கர்நாடக அரசு சார்பில் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது.

புதுடெல்லி,

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு தடை கோரி கர்நாடக அரசு தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசு சார்பில், இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என முறையிடப்பட்டது.

இதற்கு தமிழக அரசு சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கர்நாடக அரசின் மனுவை ஜனவரி இறுதி வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.



மேலும் செய்திகள்