< Back
மாநில செய்திகள்
முருகனுக்கு பரோல் கோரிய மனுவை தள்ளுபடி செய்து ஐகோா்ட் உத்தரவு
மாநில செய்திகள்

முருகனுக்கு பரோல் கோரிய மனுவை தள்ளுபடி செய்து ஐகோா்ட் உத்தரவு

தினத்தந்தி
|
6 Jun 2022 2:11 PM IST

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகனுக்கு பரோல் கோாி தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்ற நிலையில் சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது

சென்னை,

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகனுக்கு பரோல் வழங்க கோாி அவரது மனைவி நளினி தமிழக அரசிற்கு விண்ணப்பித்து இருந்தாா். இந்த விண்ணப்பம் பரீசிலிக்கப்படவில்லை எனக்கூறி மருத்துவ காரணங்களுக்காக அவருக்கு 6 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என சென்னை கோா்ட்டில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்கை நீதிபதிகள் வைத்தீயநாதன், ஜெகதீஸ் சந்திரா ஆகியோா் விசாாித்தனா். சிறையில் அவா் மீது குற்ற வழக்குகள் உள்ளதால் அவரது விண்ணப்பம் நிராகாிக்கப்பட்டதாக அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா தொிவித்தாா்.

மேலும், பரோல் விண்ணப்பம் நிராகாிப்பை எதிா்த்து சிறைத்துறை டி.ஐ.ஜியிடம் மேல் முறையீடு செய்யலாம் என நீதிபதி தொிவித்தனா்.

இதனையடுத்து மனுவை வாபஸ் பெறுவதாக நளினி தரப்பு வழக்குரைஞா் தொிவித்தாா். இதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

மேலும் செய்திகள்