< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
கல்குவாரிகளை ஆய்வு செய்யக்கோரி மனு
|11 Jun 2022 5:29 PM IST
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் திருத்தணி தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.சந்திரன் தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி ஒரு மனு கொடுத்தார். அதன் விவரம் வருமாறு;-
திருத்தணி தொகுதிக்குட்பட்ட உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாகவும், நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி தரக்கோரியும், பள்ளி மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட நபார்டு உலக வங்கி நிதி உதவி மூலம் நிதி ஒதுக்கீடு செய்து தரக்கோரியும், தொகுதியில் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், சாலை வசதி, மின் விளக்கு வசதி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.