< Back
மாநில செய்திகள்
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்

தினத்தந்தி
|
18 Oct 2023 3:00 AM IST

பழனியில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

பழனி ஒன்றிய சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில், பழனி தாலுகா அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது. பழனியில் வீடு இன்றி வாடகை வீடுகளில் வசித்து வரும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி இந்த போராட்டம் நடைபெற்றது.

இதற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் பிச்சைமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். இதில், பொதுமக்கள், சி.ஐ.டி.யூ. நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டு, இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பழனிசாமியை சந்தித்து, தங்களது கோரிக்கை தொடர்பான மனுவை கொடுத்தனர்.

மேலும் செய்திகள்