< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
சாலை வசதி கேட்டு கிராம மக்கள் மனு
|11 Sept 2022 9:41 PM IST
பெரும்பாறை அருகே சாலை வசதி கேட்டு பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
பெரும்பாறை அருகே உள்ள தாண்டிக்குடி ஊராட்சி கூடம்நகர் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் இன்று கொடைக்கானலுக்கு வந்தனர். பின்னர் ஆர்.டி.ஓ., தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகிய அலுவலகங்களில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில், கூடம்நகரில் இருந்து தாண்டிக்குடி வரை சாலை வசதி முறையாக செய்யப்படவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எங்கள் பகுதி மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க, மருத்துவமனைக்கு செல்ல என அனைத்து தேவைகளுக்கும் தாண்டிக்குடி வரவேண்டிய நிலை உள்ளது. ஆனால் சாலை வசதி இல்லாததால் ஒத்தையடி பாதையில் ஆபத்தான முறையில் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கூடம்நகர்-தாண்டிக்குடி இடையே சாலை வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.