< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
தந்தையின் உடலை தமிழகத்திற்கு கொண்டு வரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் மனு
|12 Jan 2023 12:15 AM IST
சவுதி அரேபியாவில் இறந்த தந்தையின் உடலை தமிழகத்திற்கு கொண்டு வரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் மனு அளித்தார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சோழன்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி செல்வராணி. இவர்களுக்கு கவியரசன், பார்த்த சாரதி ஆகிய 2 மகன்கள் உள்ளனர். ரவிச்சந்திரன் சவுதி அரோபியாவில் கடந்த 10 ஆண்டுகளாக தோட்ட வேலை செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரவிச்சந்திரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்தநிலையில் இறந்த தனது தந்தையின் உடலை இந்தியாவுக்க கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது மகன் கவியரசன் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். இந்த மனுவை கலெக்டரின் நேர்முக உதவியாளர் பூங்கோதை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.