< Back
மாநில செய்திகள்
மண்பாண்ட தொழிற்பயிற்சி கூடம் அமைத்து தர வேண்டும்-கலெக்டரிடம், சங்க நிர்வாகிகள் மனு
திருநெல்வேலி
மாநில செய்திகள்

மண்பாண்ட தொழிற்பயிற்சி கூடம் அமைத்து தர வேண்டும்-கலெக்டரிடம், சங்க நிர்வாகிகள் மனு

தினத்தந்தி
|
14 Feb 2023 3:15 AM IST

நெல்லை மாவட்டத்தில் மண்பாண்ட தொழிற்பயிற்சி கூடம் அமைத்து தர வேண்டும் என கலெக்டரிடம், சங்க நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.

நெல்லை மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்க தலைவர் முருகானந்த வேளார், செயலாளர் அய்யப்பன், பொருளாளர் பிச்சாண்டி மற்றும் நிர்வாகிகள் நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயனை நேற்று சந்தித்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், மண்பாண்ட தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பொம்மைகள், விநாயகர் சிலைகள், உருவ சிலைகள் மற்றும் மண்பாண்ட பொருட்கள் செய்வதற்கு தேவையான மண் எடுத்துக்கொள்ள அனுமதி அளித்தது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் எங்கள் தொழில் சிறக்கும். எங்களுடைய வாழ்வாதாரம் மேம்படும். எங்களது மண்பாண்ட தொழிலுக்கு தொழில் பயிற்சி கூடம் ஒன்று அமைத்து தர வேண்டும், என்று கூறியுள்ளனர்.


மேலும் செய்திகள்