< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
பயிர் காப்பீடு தொகையை பெற்று தரக்கோரி விவசாயிகள் மனு
|19 Nov 2022 12:05 AM IST
பயிர் காப்பீடு தொகையை பெற்று தரக்கோரி விவசாயிகள் மனு அளித்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, தெரணி கிராமத்தை சேர்ந்த விவசாயிகளில் சிலர் பசுமை விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை பூவலிங்கத்திடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், கடந்த ஆண்டில் பயிர் காப்பீட்டிற்கு தொகை கட்டியும், இழப்பீட்டு தொகை இன்னும் வரவில்லை. அந்த பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை பெற்று தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.