< Back
மாநில செய்திகள்
முன்ஜாமீன் கோரி நியோமேக்ஸ்  நிதி நிறுவன ஏஜெண்டுகள் மனு
மதுரை
மாநில செய்திகள்

முன்ஜாமீன் கோரி நியோமேக்ஸ் நிதி நிறுவன ஏஜெண்டுகள் மனு

தினத்தந்தி
|
10 Oct 2023 2:43 AM IST

முன்ஜாமீன் கோரி நியோமேக்ஸ் நிதி நிறுவன ஏஜெண்டுகள் மனு அளித்தனர்.


மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த நியோமேக்ஸ் நிறுவனமானது, முதலீட்டாளர்களிடம் பல்லாயிரம் கோடி ரூபாயை மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து பலரை கைது செய்தனர். இந்த நிலையில், கோவில்பட்டியை சேர்ந்த ஜெயசங்கரேசுவரன் என்பவர், இந்த நிறுவனத்தில் ரூ.73 லட்சம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில், நியோமேக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய நிறுவனத்தின் ஏஜெண்டுகள் செல்வக்குமார், நாராயணசாமி மற்றும் மணிவண்ணன் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று செல்வக்குமார் மற்றும் நாராயணசாமி ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் விசாரணையை வருகிற வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்