< Back
மாநில செய்திகள்
கலெக்டரிடம் 10 கிராம மக்கள் மனு
மதுரை
மாநில செய்திகள்

கலெக்டரிடம் 10 கிராம மக்கள் மனு

தினத்தந்தி
|
10 Oct 2023 1:44 AM IST

சட்டவிரோதமாக நிலத்தடி நீர் விற்பனை செய்ததாக கலெக்டரிடம் 10 கிராம மக்கள் மனு அளித்தனர்.

மதுரை அழகர்கோவில் அருகேயுள்ள இரணியம் உள்பட 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், இரணியம் கிராமம் அருகில் அரும்பனூர் விலக்கில் சிலர் நிலத்தடி நீரை சட்ட விரோதமாக உறிஞ்சி எடுத்து, சுற்றுப்புற பகுதிகளில் லாரிகளில்

விற்பனை செய்து வருகின்றனர். அவர்கள் ராட்சத மோட்டார் வாயிலாக நிலத்தடி நீரை அரசு அனுமதியின்றி உறிஞ்சுவதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் இரணியம், இலுப்பகுடி, சுந்தர்ராஜன்பட்டி, அரும்பனூர், திருவிழான்பட்டி உள்பட 10 கிராம மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே நிலத்தடி நீரை சட்ட விரோதமாக உறிஞ்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டு இருந்தது.

Related Tags :
மேலும் செய்திகள்