< Back
மாநில செய்திகள்
உய்யகொண்டான் வாய்க்காலை தூர்வார வேண்டும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு
திருச்சி
மாநில செய்திகள்

உய்யகொண்டான் வாய்க்காலை தூர்வார வேண்டும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு

தினத்தந்தி
|
26 April 2023 7:36 PM IST

உய்யகொண்டான் வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

திருச்சி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்டாட்சியர் தவச்செல்வம் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்தனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு கொடுத்த மனுவில், உறையூர் காசி விளங்கி மீன் மார்க்கெட் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. ஆகவே இந்த சாலையை விரிவுபடுத்த வேண்டும். உய்யகொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலக்கிறது. விவசாய பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் வகையில் தூர்வார வேண்டும். உறையூர் லிங்காநகர், கோவிந்தசாமி நகர், மங்கல் நகர், சுப்பிரமணியபுரம், செல்வம் நகர் உள்ளிட்ட இடங்களில் பன்றி தொல்லைகள் காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் கொடுத்த மனுவில், அரியமங்கலத்தில் நாய் கருத்தடை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தை கால்நடை மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், மாநகராட்சி வருவாய் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு முறையான தகவல் வழங்குவதில்லை எனவே வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு கனிவுடன் பதில் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்