விழுப்புரம்
அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினர் கலெக்டரிடம் மனு
|கள் மீதான தடையை நீக்கக்கோரி அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினர் கலெக்டரிடம் மனு
விழுப்புரம்
அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினர் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோாிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் விழுப்புரம் பூரிகுடிசையில் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்து பனையேறும் தொழிலாளர்கள் குடும்பத்துடன் 6-வது நாளாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் செஞ்சி, அவலூர்பேட்டை, கஞ்சனூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பனையேறும் தொழிலாளர்கள் மீது சாராயம் விற்றதாக கூறி அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சாராயம் விற்பனை செய்யவில்லை. எனவே பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள பனையேறும் தொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், பூரிகுடிசை கிராம பெண்களை தகாத வார்த்தைகளால் பேசி இழிவு படுத்திய கஞ்சனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழ்நாட்டில் கள் மீதான தடையை உடனடியாக நீக்கி, கள்ளை இறக்கவும், பருகவும், விற்கவும் பனையேறும் தொழிலாளர்களுக்கு உள்ள உரிமையை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.