திருச்சி
கொள்ளிடம் ரெயில்வே பாலத்தை சீரமைக்கக்கோரி மனு
|கொள்ளிடம் ரெயில்வே பாலத்தை சீரமைக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.
ஆம் ஆத்மி கட்சி மாநில மகளிரணி செயலாளர் ஸ்டெல்லாமேரி தலைமையில் கட்சி நிர்வாகிகள் திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளரிடம் கொடுத்த மனுவில், திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு மற்றும் மண் அரிப்பு காரணமாக கொள்ளிடம் ரெயில்வே பாலம் தொடங்கும் முதல் 7 சிமெண்டு காரிடர்களில் சிமெண்டு அரிப்பும், இரும்பு துருப்பிடித்தலும் ஏற்பட்டு மிகவும் பழுதடைந்து உள்ளது. தொடர் மழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாகும்போது, மேலும் பழுதடையவும், ரெயில் விபத்து ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த வழித்தடத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, காசி முதல் ராமேசுவரம் வரை அனைத்து மக்களும் புனித யாத்திரை செல்கிறார்கள். ஆகவே உடனடியாக கொள்ளிடம் ரெயில்வே பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று கூறி இருந்தனர். மேலும், திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு அதிவீரபாண்டியனையும் சந்தித்து மனு அளித்தனர். அப்போது மாவட்ட பொறுப்பாளர்கள் விமல்ராஜ், இளங்கோ, சர்புதீன் உள்பட பலர் உடனிருந்தனர்.