கரூர்
தூய்மை பணியாளர்களை நிரந்தர பணியில் அமர்த்தக்கோரி மனு
|தூய்மை பணியாளர்களை நிரந்தர பணியில் அமர்த்தக்கோரி மனு அளிக்கப்பட்டது.
கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கரூர் மாநகராட்சியில் 20 ஆண்டுகளாக முழுநேரம் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் தற்போது தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். தற்போது தூய்மை பணியாளர்களின் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அவர்களுக்கு ஒருநாள் விடுப்பு எடுத்தால் 2 நாள் ஊதியம் பிடித்தம் செய்கிறார்கள். மிக குறைந்த ஊதியம் தருகிறார்கள். சரியான நேரத்தில் ஊதியம் தருவதில்லை. 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள் என்பன உள்ளிட்ட இதுபோன்ற பல கோரிக்கைக்காக போராடும் கரூர் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் அனைவரையும் ஒப்பந்த பணியை நீக்கி, நிரந்தர அரசு பணியில் அமர்த்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.