< Back
மாநில செய்திகள்
கொட்டகை அமைக்க அரசு உதவி செய்யக்கோரி மனு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

கொட்டகை அமைக்க அரசு உதவி செய்யக்கோரி மனு

தினத்தந்தி
|
20 Dec 2022 12:30 AM IST

கொட்டகை அமைக்க அரசு உதவி செய்யக்கோரி கீழப்பெரம்பலூரை சேர்ந்த பெண்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா, வயலப்பாடி கிராமத்தை சேர்ந்த பெண்களில், சிலர் வந்து மாவட்ட கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர். அதில், எங்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையினர் மூலம் இலவச வீட்டு மனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர். குன்னம் தாலுகா, கீழப்பெரம்பலூர் மேலத் தெருவில் கால்நடை வளர்க்கும் தொழில் செய்யும் பெண்கள் வந்து கொடுத்த மனுவில், நாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளை பராமரிக்க கொட்டகை அமைக்க அரசு உதவி செய்ய வேண்டும், என்று கூறியிருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்