< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
விலையில்லா தையல் எந்திரம் வழங்கக்கோரி மனு
|20 Sept 2022 12:15 AM IST
விலையில்லா தையல் எந்திரம் வழங்கக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் அளிக்கப்பட்டன. இதில் அரியலூர் மாவட்டம் தேளூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் அளித்த மனுவில் தாங்கள் 3 ஆண்டுகளுக்கு முன்பு என்.ஜி.ஓ. மூலம் தையல் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்று உள்ளோம். எங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் விலையில்லா தையல் எந்திரம் வழங்கப்படவில்லை. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதுபோல் பலர் மனு அளித்தனர்.