< Back
மாநில செய்திகள்
கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி விற்பனை சங்கம் அமைக்கக்கோரி மனு
அரியலூர்
மாநில செய்திகள்

கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி விற்பனை சங்கம் அமைக்கக்கோரி மனு

தினத்தந்தி
|
8 Aug 2023 12:10 AM IST

கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி விற்பனை சங்கம் அமைக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட நெசவாளர்களை கொண்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி விற்பனை சங்கம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. அப்போது சங்கத்தில் பொறுப்பில் இருந்தவர்களின் சரியான வழிகாட்டுதல் இன்றி சங்கம் தொய்வடைந்து, உற்பத்தி மற்றும் விற்பனை இல்லாமல் கடந்த 2001-ம் ஆண்டு கலைக்கப்பட்டது. தற்போது பொன்பரப்பி கிராமத்தில் பருத்தி மற்றும் பட்டு நெசவாளர்கள் நெசவு செய்து வருகின்றனர். இவர்கள் கூட்டுறவு சங்கத்தில் இணைந்து செயல்பட விரும்புகின்றனர். எனவே கலைக்கப்பட்ட சங்கத்தை அதே பதிவு எண்ணுடன் புதுப்பித்து தர வேண்டும். இதன் மூலம் அரசு நெசவாளர்களுக்கு வழங்கும் சலுகையை நெசவாளிகள் பெற முடியும் என்ற கோரிக்கை மனுவை கைத்தறித்துறை அதிகாரியிடம் நேற்று பொன்பரப்பி கிராம நெசவாளிகள், பொதுமக்கள் சேர்ந்து வழங்கினர். செங்குந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கைத்தறி துறை அலுவலர் பூபதி, அந்த மனுவைப் பெற்றுக்கொண்டு, அதற்கான நடவடிக்கை குறித்து மேல் அதிகாரிகளிடம் தெரிவித்து, விரைவில் ஆவன செய்வதாக கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்