< Back
மாநில செய்திகள்
ஆலங்குளம் பேரூராட்சி தே.மு.தி.க. கவுன்சிலரை தகுதி நீக்கம் செய்யக்கோரி மனு
தென்காசி
மாநில செய்திகள்

ஆலங்குளம் பேரூராட்சி தே.மு.தி.க. கவுன்சிலரை தகுதி நீக்கம் செய்யக்கோரி மனு

தினத்தந்தி
|
27 Nov 2022 12:15 AM IST

ஆலங்குளம் பேரூராட்சி தே.மு.தி.க. கவுன்சிலரை தகுதி நீக்கம் செய்யக்கோரி 8 கவுன்சிலர்கள் செயல் அலுவலரிடம் மனு கொடுத்தனர்.

ஆலங்குளம்:

ஆலங்குளம் பேரூராட்சி கவுன்சிலர்கள் 3-வது வார்டு ஆரோக்கியமேரி (சுயேச்சை), 5-வது வார்டு பபிதா (சுயே.), 6-வது வார்டு உமாதேவி (தி.மு.க.), 8-வது வார்டு அன்னக்கிளி (தி.மு.க.), 9-வது வார்டு சுபாஸ் சந்திரபோஸ் (அ.தி.மு.க.), 10-வது வார்டு சுந்தரம் (தி.மு.க.), 11-வது வார்டு வென்சி ராணி (அ.தி.மு.க.), 13-வது வார்டு கணேசன் (சுயே.) ஆகியோர் கூட்டாக பேரூராட்சி செயல் அலுவலர் பூதப்பாண்டியிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆலங்குளம் பேரூராட்சி 4-வது வார்டு கவுன்சிலர் பழனிசங்கர் (தே.மு.தி.க.) பஸ்நிலைய வணிக வளாகம் மற்றும் கழிப்பிடத்தை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். அவர் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்றபோது, தனது பெயரில் ஆலங்குளம் பேரூராட்சியில் உள்ள பஸ்நிலைய குத்தகை கடை-1, 2 மற்றும் குத்தகை கழிப்பிடம் ஆகியவற்றின் ஒப்பந்தத்தை ரத்து செய்யாமல் பதவி ஏற்று உள்ளார். பேரூராட்சி உறுப்பினர் மற்றும் குத்தகைதாரர் என்ற இரு ஆதாயம் தரும் பதவிகளை அவர் அனுபவித்து வருவதால் பேரூராட்சி கவுன்சிலர் ஆகும் தகுதியை இழந்து விடுகிறார். எனவே அவரை தகுதி நீக்கம் செய்ய ஆணை பிறப்பித்து பேரூராட்சி மன்ற தீர்மானத்தில் இணைக்க கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்