< Back
மாநில செய்திகள்
சாதி சான்றிதழில் மாற்றம் செய்ய வேண்டுகோள்
அரியலூர்
மாநில செய்திகள்

சாதி சான்றிதழில் மாற்றம் செய்ய வேண்டுகோள்

தினத்தந்தி
|
10 Jan 2023 12:42 AM IST

சாதி சான்றிதழில் மாற்றம் செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்ட தமிழ்நாடு வண்ணார் பேரவை சார்பில் கலெக்டரிடம் ஒரு மனு அளிக்கப்பட்டது. அதில், எங்களுக்கு வழங்கப்படும் சாதி சான்றிதழில் முதலில் வண்ணான் என்று இருந்தது. பின்னர் அதனை வண்ணார் என்று மாற்றி அளித்தார்கள். அதன்பிறகு வண்ணார் சலவை தொழிலாளி என வழங்கப்பட்டு வருகிறது.

இதில் சலவை தொழிலாளி என்ற வார்த்தையை நீக்கக்கோரி மனு அளித்திருந்தோம். அதன்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந் தேதி சலவை தொழிலாளர் என்ற பெயரை நீக்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இருப்பினும் தற்போது வரை வழங்கப்படும் சாதி சான்றிதழ்களில் வண்ணார் சலவை தொழிலாளி என்றே வழங்கப்பட்டு வருகிறது. அதனை மாற்றி வண்ணார் என்று வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்