< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
பட்டாதாரர்களுக்கு இடம் வழங்கக்கோரி மனு
|3 Oct 2023 12:15 AM IST
பட்டாதாரர்களுக்கு இடம் வழங்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.
நயினார்கோவில்,
பரமக்குடி தாலுகா நயினார்கோவில் யூனியன் தாளையடிகோட்டை எல்கையில் அமைந்துள்ள சீர் மரபினர் காலனிக்கு 25 வருடத்திற்கு முன்பு 158 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. இந்நிலையில் சீர் மரபினர் காலனியில் உள்ள கருவேல மரங்களை அகற்றி உரிய பட்டாதாரர்களுக்கு இடம் வழங்கக்கோரி சப் கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அதை விசாரித்து உடனே கருவேல மரங்களை அகற்றி பட்டாதாரர்களுக்கு இடத்தை வழங்க அவர் உத்தரவிட்டார்.
ஆனால் அதிகாரிகள் காலதாமதம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பொதுமக்கள் சப் கலெக்டரிடம் மீண்டும் மனு அளித்தனர். அதில், தங்கள் நிலத்தில் உள்ள கருவேல மரங்களை நாங்களே அகற்ற அனுமதிக்குமாறும், தங்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அளந்து கல்லை ஊன்றி தர வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.