< Back
மாநில செய்திகள்
அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு

தினத்தந்தி
|
18 Jun 2022 12:02 PM IST

அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ராம்குமார் ஆதித்தன், சுரேன், கேசி பழனிசாமி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு தொடர்பாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில் பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நடத்த தடை விதிக்கவும், கட்சியில் இருந்து உறுப்பினர்களை நீக்கவும், புதிதாக பதவிகளில் நியமிக்கவும் தடை விதிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. இது கட்சி விதிகளுக்கு எதிரானது. எனவே, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் தந்து நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குரல் ஓங்கியுள்ள நிலையில், கட்சியின் விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்