< Back
மாநில செய்திகள்
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல்...!
மாநில செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல்...!

தினத்தந்தி
|
20 Feb 2023 7:11 PM IST

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் 25ம் தேதி மாலை நிறைவடைய உள்ளது. திமுக சார்பில் வாக்காளர்களை சில இடங்களில் அடைத்து வைத்து, பரிசு பொருட்கள் வழங்குவதாகவும், வீடு வீடாக சென்று பணம், பரிசு பொருட்கள், உணவு பொருட்கள் வழங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் இடைத்தேர்தலையொட்டி, மாதிரி ஓட்டுப்பதிவு வேட்பாளர்கள், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் தொடர்பாக புகார் அளித்தாலும், இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் என்று எவ்வித புகாரும் தன்னிடம் வரவில்லை என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஈரோடு இடைத்தேர்தலுக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் கோவையை சேர்ந்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தலைவர் ஈஸ்வரன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தேர்தல் முறைகேடு தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி அளிக்கப்பட்ட மனுவில் தலைமை தேர்தல் அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்