< Back
மாநில செய்திகள்
முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு - ஜனவரி 2-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
மாநில செய்திகள்

முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு - ஜனவரி 2-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

தினத்தந்தி
|
22 Dec 2023 11:48 PM IST

விழுப்புரம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ராஜேஷ்தாஸ், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

சென்னை,

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சட்டம்-ஒழுங்கு முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் குற்றவாளி என்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் கடந்த ஜூன் 16-ந்தேதி தீர்ப்பளித்தது. மேலும், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ராஜேஷ்தாஸ், மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான தீர்ப்பு ஜனவரி 6-ந்தேதி அறிவிக்கப்படும் என கோர்ட்டு அறிவித்தது. இந்நிலையில், விழுப்புரம் முதன்மை அமர்வு கோர்ட்டில் உள்ள வழக்கின் விசாரணையை, வேறு கோர்ட்டுக்கு மாற்றக் கோரி ராஜேஷ்தாஸ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி ஜெயச்சந்திரன், ஜனவரி 2-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்