< Back
மாநில செய்திகள்
மனுக்கள் பெறும் முகாம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

மனுக்கள் பெறும் முகாம்

தினத்தந்தி
|
3 Aug 2023 12:15 AM IST

சங்கராபுரம் அருகே மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது.

சங்கராபுரம்

வருவாய்த்துறை சார்பில் மனுக்கள் பெறும் முகாம் சங்கராபுரம் அருகே உள்ள நெடுமானூர் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ராஜலட்சுமி, தாசில்தார் ராஜலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் பாக்கியம் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ் வரவேற்றார். இந்த முகாமில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 80 மனுக்கள் பெறப்பட்டன. இதில் வருவாய் ஆய்வாளர் ருத்ரகுமார், ஒன்றிய கவுன்சிலர் கொளஞ்சிவேலு, ஊராட்சி மன்ற துணை தலைவர் மாயக்கண்ணன், ஊராட்சி செயலாளர் சரவணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்