< Back
மாநில செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் மனு
தென்காசி
மாநில செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் மனு

தினத்தந்தி
|
5 Dec 2022 6:45 PM GMT

குத்துக்கல்வலசையில் இருந்து இலஞ்சிக்கு பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் மனு கொடுத்தனர்

தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தென்காசி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன், ஆதிதிராவிட நல அலுவலர் கந்தசாமி, உதவி ஆணையர் (கலால்) ராஜ மனோகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், இலவச வீட்டு மனைப்பட்டா, பட்டா மாறுதல், அடிப்படை வசதிகள், தனிநபர் கடன், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 511 மனுக்கள் கொடுக்கப்பட்டன.

இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி பதிலளிக்குமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தங்கவேல் கொடுத்துள்ள மனுவில், சங்கரன்கோவில் சங்கரநாராயணர் - கோமதி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் யாகங்கள் மற்றும் பூஜைகள் தமிழில் நடத்தி அனைத்து சாதியினரும் பதினெண் சித்தர் பீட அடியார்கள் வழியில் சித்தர் முறைப்படி விழா நடத்த வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி சார்பில் கொடுக்கப்பட்டுள்ள மற்றொரு மனுவில் குத்துக்கல்வலசையில் இருந்து இலஞ்சிக்கு பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்