< Back
மாநில செய்திகள்
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்    தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்    கலெக்டர் அலுவலகத்தில் மனு
கடலூர்
மாநில செய்திகள்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு

தினத்தந்தி
|
14 Sep 2022 4:19 PM GMT

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.


சிதம்பரம்,

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதியம் அடிப்படையில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் நேற்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக 170 பேர் குறைந்த ஊதியத்தை பெற்றுக்கொண்டு நிரந்தர ஊழியர்களுக்கு இணையாக அனைத்து வேலைகளையும் செய்து வருகிறோம். 1996-க்கு பிறகு பணியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர் அல்லாத ஊழியர்களும் 2 ஆண்டுகள் தொகுப்பூதியம் முடிந்த பிறகு பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். ஆனால் 12 ஆண்டுகள் முடிந்தும் நாங்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.

மிகை பணியாளர்களாக உள்ள 1033 ஊழியர்களை பணி நிரவலில் அனுப்ப நிர்வாகம் முடிவு செய்துள்ள நிலையில், அண்ணாமலை பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு 2014-ம் ஆண்டு தீர்மானத்தின்படி கடைசியாக வேலைக்கு சேர்ந்த 170 பேரையும் மிகை பணியாளர்களாக பாவித்து, பணி நிரந்தரம் செய்து, பணி நிரவலில் வெளி இடங்களுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்