திருப்பூர்
இரும்பு அலை இயக்க அனுமதியை ரத்து செய்ய வேண்டும்
|பல்லடம் அருகே தனியார் இரும்பு அலை இயக்க அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்து முறையிட்டனர்.
பல்லடம் அருகே தனியார் இரும்பு அலை இயக்க அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்து முறையிட்டனர்.
தனியார் இரும்பு ஆலை
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பல்லடம் அனுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், 'எங்கள் பகுதியில் பல்வேறு விதிமீறலுடன் தனியார் இரும்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இதனால் கடுமையான சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி தற்போது மீண்டும் அந்த இடத்தில் சட்டவிரோதமாக ஆலை இயக்க மறு அனுமதி கொடுக்காமல், நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளனர்.
திருப்பூர் மாவட்ட காது கேளாத வாய்பேச முடியாத நல சங்கத்தினர் அளித்த மனுவில், 'நாங்கள் இருசக்கர வாகனத்தை அனுபவ அடிப்படையில் ஓட்டி வருகிறோம். எங்களுக்கு லைசென்சு இதுவரை கிடைக்கவில்லை. காவல்துறையினர் சோதனை நடத்தி லைசென்சு இல்லாவிட்டால் அவர்களிடம் விளக்கி கூறுவதில் சிரமம் உள்ளது. எனவே எங்களுக்கு லைசென்சு பெற சிறப்பு முகாம் நடத்த வேண்டும்' என்று கூறியுள்ளனர்.