நாமக்கல்
4 மாதங்களுக்கு முன்புதிருட்டு போன 70 பவுன் நகைகளை மீட்டு தர வேண்டும்கலெக்டரிடம் மனு
|நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள எஸ்.பி.பி. காலனி தாஜ்நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ந் தேதி இருதய சிகிச்சைக்காக கோவை தனியார் ஆஸ்பத்திரிக்கு குடும்பத்துடன் சென்று இருந்தேன். அங்கு தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில், செப்டம்பர் மாதம் 21-ந் தேதி எனது வீட்டு என்ஜினீயர் எங்கள் வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டு இருப்பதாக கூறினார்.
பின்னர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது 70 பவுன் நகைகள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக பள்ளிபாளையம் போலீசில் புகார் செய்தேன். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் நகை திருட்டு பற்றி எங்களுக்கு எதுவும் தெரிவிக்கவில்லை. நாங்கள் போலீசாரை தொடர்பு கொள்ளும்போது பார்த்து கொண்டு இருக்கிறோம் என்கிற பதில் மட்டும் தான் கடந்த 4 மாத காலமாக தெரிவித்து கொண்டு இருக்கின்றனர். எனவே திருட்டு போன எங்களது 70 பவுன் நகைகளை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தார்.