< Back
மாநில செய்திகள்
விசைத்தறி தொழிலாளர்களின்வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்கலெக்டரிடம் மனு
நாமக்கல்
மாநில செய்திகள்

விசைத்தறி தொழிலாளர்களின்வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்கலெக்டரிடம் மனு

தினத்தந்தி
|
7 Feb 2023 12:30 AM IST

குமாரபாளையம் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இயக்கம் சார்பில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அதில் குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 7 ஆண்டுகளாக அவர்களுக்கு கூலி உயர்வு கொடுக்கப்படவில்லை. தற்போது விலைவாசி கடுமையாக உயர்ந்து உள்ள நிலையில், அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து பலமுறை தொழிலாளர்துறை முன்பாக பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தும் பலன்இல்லை.

எனவே கடந்த மாதம் 23-ந் தேதி முதல் 75 சதவீத கூலிஉயர்வு வழங்கக்கோரி விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இதுதொடர்பாக கடந்த 4-ந் தேதி குமாரபாளையம் தாசில்தார் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விசைத்தறி உரிமையாளர்கள், அடப்பு தறி உரிமையாளர்கள் மற்றும் 6 தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் விசைத்தறி உரிமையாளர்கள் தரப்பில் ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வு கொடுத்தால் மட்டுமே விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. எனவே வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு தாங்கள் (கலெக்டர்) தலையிட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், வருவாய் தொழிலாளர்துறை அலுவலர்கள் முன்னிலையில் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

மேலும் செய்திகள்