சிவகங்கை
10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரிக்கை
|10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு பிராமண சங்கத்தின் சிவகங்கை மாவட்ட கிளை சார்பில் 42-வது ஆண்டு எழுச்சி நாள் விழா மற்றும் பாரதியார் பிறந்தநாள் விழா மாவட்டத் தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. சிவகங்கை கிளை தலைவர் ராஜா, மகளிர் அணி அமைப்பாளர் பர்வத மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்டத் துணைத் தலைவர் நாராயணன் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வைத்தியநாதன், மகளிர் அணி அமைப்பாளர் சந்திரா, கிளை நிர்வாகிகள் ராஜாமணி, விஸ்வநாதன், சுந்தர்ராஜன், பாலசுப்ரமணியன், ஸ்ரீதர் ராவ், சேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர். மத்திய அரசினால் முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் தேர்வு கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.