ராமநாதபுரம்
குறைதீர்க்கும் கூட்டங்கள் நடத்த மனு
|குறைதீர்க்கும் கூட்டங்கள் நடத்த மனு அனுப்பப்பட்டு உள்ளது.
தொண்டி,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் தாலுகா செயலாளருமான குருசாமி கோரிக்கை விடுத்து முதல்-அமைச்சரின் தனிபிரிவிற்கு மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை அன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்துகிறார். இந்த மக்களுக்கு குறை தீர்க்கும் நாள் முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் உள்ள மக்கள் ஆயிரக்கணக் கானோர் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக அளித்து வருகின்றனர். மாவட்ட கலெக்டர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தாலுகாவிற்கும் நேரடியாக சென்று பொதுமக்களிடம் நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்று பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.